இலங்கை
Trending

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக பருத்தித்துறை நகசபையிலும் தீர்மானம்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

click video!

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரியும், அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள பயங்கர வாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தை நிறுத்தக்கோரியும் யாழ். பருத்தித்துறை நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர சபை அமர்வு, தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் நேற்று(25) பிற்பகலில் இடம்பெற்றது.

இதன்போது தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போலால், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரியும், புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தை நிறுத்தக்கோரியும் பிரேரணை கொண்டுவரப்பட்டது.

இதன்போது குறித்த பிரேரணை விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

15 உறுப்பினரை கொண்ட பருத்தித்துறை நகரசபையில், 12 உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவு வழங்கினர்.

தேசிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்கள் ஆதரவிலிருந்து விலகியிருந்தனர். ஒரு உறுப்பினர் சபை அமர்வுக்கு சமூகமளித்திருக்கவில்லை.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button