இலங்கை
Trending

கொழும்பு மட்டக்குளியில் ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு: ஒருவர் கைது!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

கொழும்பு, மட்டக்குளி சமித்புர பகுதியில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களோடு நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை நேற்றைய(03) தினம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபரொருவரை சோதனையிட்ட போதே, அவரது பயணப்பையிலிருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 1 கிலோகிராம் 40 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 351 கிராம் ஹெரோயினும், இரண்டு டிஜிட்டல் தராசுகள்,

போதைப்பொருளைக் கலப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கரண்டிகள் மற்றும் கைத்தொலைபேசி ஆகியவற்றைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button