இலங்கை
Trending

கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவரின் 300 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துகளை முடக்க மேல் நீதிமன்றம் உத்தரவு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சேர்த்த கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் சுமார் 300 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களை முடக்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரான குறித்த பெண்,தனது கணவருடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு, அதன் மூலம் சட்டவிரோதமான முறையில் பெருமளவு சொத்துக்களை சேர்த்துள்ளதாக பொலிஸ்மா அதிபரால் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டன.

இதன் போது, குறித்த பெண்ணின் இரண்டாவது கணவரால், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைக் கொண்டு தொட்டலங்க பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட 1.3 பேர்ச்சர்ஸ் பரப்புடைய காணி
மற்றும் 0.75 பேர்ச்சர்ஸ் காணியுடன் கூடிய மூன்று மாடி வீடு என்பன கண்டறியப்பட்டன.

இதனை அடுத்து, பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த சொத்துக்களை முடக்குவதற்கான உத்தரவு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டு, பின்னர் அது மேலும் நீடிக்கப்பட்டது.

அதற்கமைய, இன்று முதல் 7 நாட்களுக்கு இந்த சொத்து முடக்க உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button