இலங்கை
Trending

சங்கீத்சனின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியோடு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சனின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் இன்று(10) இடம்பெற்றுள்ளது.

குறித்த உரையாடலுக்கு அமைவாக, சங்கீதசனுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படாமை காரணமாக சாதாரண நீதிமன்ற முறைமையின் கீழ் பிணைக் கோரிக்கையை விடுக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து, அமைச்சர் சந்திரசேகரருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கும் இடையில் நாடாளுமன்ற வளாகத்தில் உரையாடல் இடம்பெற்றது.

​அதன்போது ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளதோடு, சங்கீத்சனின் தாயாருடனும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உரையாடியிருந்தார்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button