விளையாட்டு
Trending

FIFA உலக கிண்ண இன்று இடம்பெற்ற போட்டிகள் மூன்றும் சமநிலையில் நிறைவு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

FIFA உலகக் கிண்ணம் 2026 தொடரில் இன்றைய தினம் இடம்பெற்ற மூன்று போட்டிகளும் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.

அந்த வகையில், ஈரான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான G பிரிவுப் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது.

லொஸ் ஏஞ்சல்ஸ் விளையாட்டு மைதானத்தில் இந்தப்போட்டி இடம்பெற்றது.

போட்டியின் 7ஆவது மற்றும் 54ஆவது நிமிடங்களில் எலிஜா ஜஸ்ட் அடித்த கோல்களால் நியூசிலாந்து இருமுறை முன்னிலை பெற்றது.

அதன் பின்னர் ஈரான் அணி வீரர் ரமின் ரெசாயியன்,32ஆவது நிமிடத்தில் ஒரு கோலையும், 64வது நிமிடத்தில் முகம்மது மொஹெபி ஒரு கோலையும் போட்டனர். இதன்மூலம் போட்ட சமநிலையாகியது

இதேவேளை, பெல்ஜியம் மற்றும் எகிப்து அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது.

மேலும், சவுதி அரேபியா மற்றும் உருகுவே அணிகளுக்கு இடையிலான போட்டியும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நிறைவடைந்திருந்தது.

இதன்காரணமாக இந்த மூன்று போட்டிகளிலும் விளையாடிய அணிகள் தலா ஒவ்வொரு புள்ளியைப் பகிர்ந்து கொண்டன.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button