உலகம்
Trending

சாலமன் பாப்பையா காலமானார்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தமது 90 வது வயதில் நேற்று (11) காலமானார்.

வயது மூப்பு காரணமாக மதுரையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும், தமிழ் இலக்கிய விளக்கவுரையாளருமான சாலமன் பாப்பையா, எளிய மற்றும் நகைச்சுவையான தமிழில் பேசி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஆவார்.

அன்றாட சமூக நிகழ்வுகள் மற்றும் குடும்பச் சூழல்களை மையமாகக் கொண்டு இவர் நடத்தும் பட்டிமன்றங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

சாலமன் பாப்பையா 1936ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்காவிலுள்ள சாத்தங்குடியில் பிறந்தார்.
இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். மேலும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான முதல்வன், போய்ஸ் மற்றும் சிவாஜி உள்ளிட்ட மூன்று திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ள இவர், இலக்கியத் திறனாய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். ‘பட்டிமன்றமும் பாப்பையாவும்” என்ற தன்வரலாற்று நூலை எழுதியுள்ளார்.

திருக்குறள் உரை, புறநானூறு புதிய வரிசை வகை, அகநானூறு உள்ளிட்ட உரை நூல்களையும், ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: ஓர் பார்வை” என்ற இலக்கியத் திறனாய்வு நூலையும் எழுதியுள்ளார்.

மேலும், ‘அவர்கள் கண்ட ராமன்”, ‘இவர்கள் நோக்கில் கம்பன்”, ‘கம்பவனத்தில் ஓர் உலா”, ‘கம்பனின் தமிழமுது” போன்ற பல்வேறு நூல்களைத் தொகுத்துள்ளார்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button