இலங்கை
Trending

செம்மணியில் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது, “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம் இன்று(16) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம் செம்மணிச் சந்தியில் இரவு பகலாக இடம்பெற்று வருகிறது.

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரும் இந்தப் போராட்டம், 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நாளை 17 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இந்தப் போராட்டம் இரவு பகலாக தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகிறது.

பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈஸ்வரபாதம் சரவணபவன், பாக்கியச்செல்வம் அரியநேத்திரன், வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸ் ஆகியோர் வருகைதந்து போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button