இலங்கை
Trending

அரச படையினருக்கு காணி வழங்க தீர்மானம் கொண்டுவந்ததால் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

படையினருக்கு காணி வழங்க யாழ். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டதால் அங்கு அமைதியற்றநிலை தோன்றியிருந்தது.

அதனைத் தடுக்க ஒருங்கிணைப்புக் குழு தலைவரால் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை சுமூகநிலைக்குக் கொண்டுவரப்பட்டது.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(19) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது யாழ் மாவட்டத்தில், முப்படையினருக்கு அரச காணிகள் வழங்கும் நோக்குடன் யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பிரஸ்தாபித்து தீர்மானம் ஒன்றை ஒருங்கிணைப்புக் குழு நிறைவேற்ற முற்பட்டது.

அதற்கு சபையில் கடும் எதிர்ப்பு தோன்றியதை அடுத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமளிதுமளி ஏற்பட்டது.

குறிப்பாக நெடுந்தீவில் அரச காணி ஒன்றிலிருந்து கடற்படையினருக்கு ஒரு ஏக்கர் காணியை வழங்க பிரதேச ஒருங்கிணைப்பு குழு தீர்மானித்துள்ளதாகவும் அதற்கான அனுமதியை வழங்குமாறும் கோரப்பட்டது.

இதன்போது, மக்களுக்கு காணி இல்லாதிருக்கும் நிலையில் அரச படையினரின் தேவைக்காக காணி வழங்க முடியாதென பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இது யாழ்ப்பாணத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறான நிலையில் மக்கள் காணிகளை மக்களுக்கு வழங்காமல் படைத்தரப்புக்கு வழங்க முடியாது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதன்போது இரு தரப்பினருக்குமிடையில் காரசாரமான வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

இந்த நிலையில் மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு, சூமுகமான நிலை ஏற்படுத்தக்பட்டது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button