விளையாட்டு
Trending

அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு எதிராக FIFA ஒழுக்காற்று நடவடிக்கை!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

2026 ஆம் ஆண்டு FIFA உலக கிண்ண கால்பந்து போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், அர்ஜென்டினா அணி மற்றும் வீரர்கள் மீது FIFA ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளது.

அர்ஜென்டினா அணி கலந்து கொண்ட பல்வேறு போட்டிகளில் பல இடங்களில் விதிமீறல்கள் நடைபெற்றிருப்பதாக கூறி FIFA இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதில், பாரபட்சமான கோஷங்கள் மற்றும் சைகைகள், போட்டியை தாமதமாக ஆரம்பித்தல், போட்டி மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற தவறுதல் ஆகியவை குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும் அர்ஜென்டினா அணியின் நாகுவல் மொலினா, லியாண்ட்ரோ பரேடெஸ், தியாகோ அல்மாடா மற்றும் உதவி பயிற்சியாளர் ராபர்டோ அயலா மற்றும் ஸ்பெயின் அணி வீரரான பாப்லோ மார்ட்டின் பாயிஸ் கவிரா ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளன.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button