உலகம்
Trending

ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருமாறு ஈரானிடம் வலியுறுத்தியது சீனா!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

ஹோர்முஸ் நீரிணையில் வழமையான கப்பல் போக்குவரத்தை மீளக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஈரானிடம் உத்தியோகபூர்வமாக சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

சீன வெளிவுவகார அமைச்சர் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கு இடையில் நேற்று(15) தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது.

இந்த உரையாடலின் போதே ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்து விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை ஒரு சர்வதேச கடல் வழிப்பாதை என்பதால், அங்கு கப்பல் போக்குவரத்தின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

அதேவேளை, நீரிணையை அண்டியுள்ள நாடு என்ற ரீதியில் ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் சட்டபூர்வமான உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.

பிராந்தியத்தில் அமைதி மற்றும் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு சீனா தொடர்ந்தும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும் எனவும் சீன வெளிவிவகார அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button