இலங்கை
Trending

உலக கிண்ண கால்பந்தட்ட போட்டியில் அவுஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த தமிழர்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

அவுஸ்திரேலிய தேசிய கால்பந்தாட்ட அணியின் 26 பேர் கொண்ட 2026 உலகக் கிண்ண இறுதி அணியில், தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த விங்கர் நிஷான் வேலுப்பிள்ளை இடம்பிடித்துள்ளார்.

இதன் மூலம் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் பங்கேற்கும் முதல் தமிழர் வம்சாவளி வீரர் என்ற வரலாற்றை அவர் பதிவு செய்துள்ளார்.

25 வயதான விங்கர் நிஷான் வேலுப்பிள்ளை, மெல்போர்னில் பிறந்து வளர்ந்து, Melbourne Victory அகாடமி மூலம் முன்னேறி தேசிய அணிக்கு வந்துள்ளார்.

2024 தகுதிச்சுற்றுப் போட்டியில் அறிமுகமான அவர், முதல் போட்டியிலேயே கோல் அடித்து அனைவரது கவனத்தையும் பெற்றிருந்தார்.

இதுவரை அவுஸ்திரேலிய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி 3 கோல்கள் பதிவு செய்துள்ளார்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button