Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கைஉலகம்குற்றவியல்வடக்கு மாகாணம்
Trending

சட்டவிரோத மணல் ஏற்றிய டிப்பருடன் இருவர் கைது!

யாழில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் டடிப்பர் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இன்று (27) இடம்பெற்றுள்ளது.

குறித்த மணலானது கொடிகாமம், சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் பகுதிகளை தாண்டி வந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த மணல் கிளாலி பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஏற்றிவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தபொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button