
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று(20) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றது.
இந்நிலையில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செப்டெம்பர் 3ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Follow Us





