விளையாட்டு
Trending

டெஸ்ட் தொடரில் விளையாட இலங்கை வரும் இந்திய அணி!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

இலங்கை அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளது.

முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த 4 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி, தற்போது 3 நாட்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டுள்ளதோடு, அது ஓகஸ்ட் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஓகஸ்ட் 15 முதல் 19ஆம் திகதி வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மேலும், இரண்டாவதும் மற்றும் இறுதியுமான டெஸ்ட் போட்டி ஓகஸ்ட் 23 முதல் 27ஆம் திகதி வரை கொழும்பு SSC கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button