விளையாட்டு
Trending

தெற்காசிய எறிபந்து போட்டியில் விளையாடும் வடக்கின் வீரர்கள்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

தெற்காசிய எறிபந்து (Throwball) போட்டிக்கு இலங்கை தேசிய அணியில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் விளையாடுகின்றனர்.

இந்தியாவில் இன்று 16 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள தெற்காசிய எறிபந்துப்போட்டி,நாளை மறுதினம் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, வவுனியா கனகராஜன்குளம் மகா வித்தியாலய மாணவரான நா.நாவேந்தன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் ஏ.ஜெனிஸ்ரன் ஆகியோர் விளையாடுகின்றனர்.

எறிபந்து விளையாட்டில் திறமைகளை வெளிப்படுத்தி தேசிய அணியில் விளையாடும் இவ்விரு வீரர்களும், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button