
மன்னார், தென் பார் கடற் பகுதியில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 26 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு 60 ஆயிரத்துக்கும் அதிகமான கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, 12 இழைநார் படகுகள்மற்றும் 12 வெளிப்பொறி இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


இலங்கையின் வட மத்திய கடற்படை கட்டளைப் பிரிவினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் படகுகள் உள்ளிட்ட உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Follow Us





