இலங்கை
Trending

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு:இன்று முதல் புதிய கட்டணம் அமுலில்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

மின்சாரக் கட்டணம் இன்று(11) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது.

அதற்கமைய இந்த புதிய கட்டண முறைமை இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

மின் உற்பத்திக்கான செலவுகள் உயர்ந்துள்ளதால் மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள சுமார் 38 பில்லியன் ரூபாய் வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில் இந்த கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நுகர்வோர் மீதான சுமையைக் குறைக்கும் வகையில், அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் மானியத்தை வழங்க இணங்கியுள்ளது.

இந்த மானியச் சலுகை எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.

மாதந்தோறும் 180 அலகுகள் (Units) வரை மின்சாரத்தைப் பயன்படுத்தும் சாதாரண வீட்டு நுகர்வோருக்கு எவ்வித கட்டண அதிகரிப்பும் மேற்கொள்ளப்படாது.

எனினும், 210 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோருக்கான கட்டணங்கள் பயன்பாட்டு அளவிற்கு ஏற்ப அதிகரிக்கப்படவுள்ளன.

இதேவேளை, மத ஸ்தலங்களைப் பொறுத்தவரை, 180 அலகுகள் வரையான பயன்பாட்டிற்கு கட்டண அதிகரிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேற்பட்ட பயன்பாட்டுப் பிரிவுகளுக்கு கட்டண உயர்வு அமுலாகும்.

சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகளுக்குப் பாதிப்புகள் இல்லாத போதிலும், பாரிய அளவிலான தொழிற்சாலைகளுக்கு சுமார் 18 சதவீத கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களுக்கான கட்டணங்கள் சராசரியாக 11 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button