இலங்கை
Trending

யாழில் பொலிஸ் நிலையமும், தங்கிடங்களும் திறந்து வைப்பு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் புதிதாக அமைக்கப்பட்ட பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கான விடுதிகளை நேற்று (14) திறந்து வைத்தனர்.

அதற்கமைய புதிதாக அமைக்கப்பட்ட கோப்பாய் பொலிஸ் நிலையத்தை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபாலவும், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் திறந்துவைத்தனர்.

அவர்களோடு இந்த நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன்,ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் , ஸ்ரீ பவானந்தராஜா, வடக்கு மாகாண சிரேஷ்ட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், வடக்கு மாகாண கட்டளை தளபதி, யாழ். அரசாங்க அதிபர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஓய்வு விடுதியை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சரும், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய திறந்து வைத்தனர்.

மேலும், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ள காணியில் புதிதாக அமைக்கப்பட்ட விடுதியை அமைச்சரும்,பொலிஸ் மா அதிபரும், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனும் இணைந்து திறந்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற குழுவினர் அங்கு அமைக்கப்பட்ட விடுதியையும் திறந்து வைத்தார்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button