இலங்கை
Trending

யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் நேற்றைய தினம்(17) புதிதாக 11 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 35ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று இடம்பெற்றன.

மேலும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் சேதமடைந்த மோதிரம் ஒன்றும், விரல் எலும்புடனான செப்பிலான மோதிரம் ஒன்றும், குவியலாக இரண்டு தொகுதி என்புகூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என இதுவரை 89 நாட்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது 431 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 423 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button