
யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தின் அரை ஆண்டுக்கான நிர்வாக மற்றும் செயற்பாட்டுப் பரிசோதனை நடவடிக்கைகள் இன்று (01) இடம்பெற்றன.
யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் J.P.S. ஜெயமஹா தலைமையில் குறித்த பரிசோதனை நிகழ்வு இடம்பெற்றது.



யாழ்.பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் K.A.E.N. தில்றுக் மற்றும் யாழ்.பிரதான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி R.M.P.பாலித்த செனவிரத்ன ஆகியோரின் நெறியாள்கையில் இந்த பரிசோதனை நிகழ்வு இடம்பெற்றது.



இந்த பரிசோதனை நடவடிக்கையின் போது, பொலிஸார் தமது பொதுச் சேவைகளையும், பாதுகாப்புப் பணிகளையும் முன்னெடுப்பதற்காகப் பயன்படுத்தும் உத்தியோகபூர்வ வாகனங்களின் தரம் மற்றும் பராமரிப்பு நிலைமைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது.
Follow Us





