விளையாட்டு
Trending

பொதுநலவாய போட்டியில் தங்கம் வென்று,ருமேஷ் தரங்க வரலாற்றுச் சாதனை!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில், இலங்கை வீரர் ருமேஷ் தரங்க, தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவின் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா உள்ளிட்ட உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற போட்டியில், ருமேஷ் தரங்க 89 புள்ளி 75 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதன்மூலம், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை தங்கப் பதக்கம் வெல்வதற்கான 20 ஆண்டுகால காத்திருப்பும் முடிவுக்கு வந்துள்ளது.

2006 ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில் பளுதூக்குதல் வீரர் சிந்தன விதானகே தங்கம் வென்ற பின்னர், பொதுநலவாய மேடையில் இலங்கை கைப்பற்றும் முதல் தங்கப் பதக்கம் இது அமைந்துள்ளது.

மேலும், பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் இலங்கை வென்ற 5ஆவது தங்கப் பதக்கமாகவும் இது பதிவாகியுள்ளது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button