மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சியூட்டா பகுதிக்குள் நுழைந்த அகதிகளில் அதிகமானவர்கள் மீண்டும் மொராக்கோவிற்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஸ்பெயினுக்குள் நுழைந்த சுமார் 60 ஆயிரம் அகதிகளுள் 50 ஆயிரம்பேர் தாங்களாகவே மீண்டும் மொராக்கோவுக்கு திரும்பியுள்ளனர்.

ஸ்பெயினுக்குள் நுழைய முயன்றபோது ஏற்பட்ட நெரிசல் மற்றும் கடலைக் கடந்து நீந்திச் செல்லும் முயற்சியின் போது, மூழ்கி மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 57 பேர் வரை உயிரிழந்திருந்தனர்.
மனிதக் கடத்தல் குழுவினர் இந்த நிலைமையைப் பயன்படுத்தி மக்களை சட்டவிரோதமாக எல்லை தாண்டத் தூண்டியதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்சஸ் கடுமையாகக் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

மேலும், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தப்படுவதோடு, மனிதக் கடத்தல் வலையமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சியூட்டா பகுதிக்குள் நுழைந்த அகதிகளில் அதிகமானவர்கள் மீண்டும் மொராக்கோவிற்கு திரெப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.