
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவால், சமர்ப்பிக்கப்பட்ட சீராய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
யோஷித ராஜபக்சவால் சமர்ப்பிக்கப்பட்ட சீராய்வு மனு மீதான தீர்மானம் இன்று (3) அறிவிக்கப்பட்ட போதே நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளது.


நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலுள்ள “சதி” என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மனு மீதான விசாரணை நீதியரசர்களான அமல் ரணராஜா மற்றும் சுமுது பிரேமச்சந்திர ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
இதேவேளை யோஷித ராஜபக்ச கடந்த மாதம் 17 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





