இலங்கை
Trending

“வட்டுக்கோட்டை 50” எழுச்சிமாநாடு நிறைவு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவு எழுச்சி மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று(20) இடம்பெற்றது.

“வட்டுக்கோட்டை 50” எழுச்சி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தலைமையில் மாநாடு ஆரம்பமாகியது.

முதலில், தந்தை செல்வா சதுர்க்கத்தில் தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன்பின்னர் மணிக்கூட்டு கோபுர சதுக்கத்தை ஊர்வலமாக வந்தடைந்த நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு வீற்றிருக்கும் தமிழ் மன்னர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து தந்தை செல்வா கலையரங்கில் மாநாடு ஆரம்பமாகியது.

மாநாட்டில் இந்து, கிறித்தவ மத குருமார்கள் அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தினரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், அரியனேந்திரன்,

வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன்,ய உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button