இலங்கைஉலகம்குற்றவியல்தென் மாகணம்
Trending

கருக்கலைப்பு நிலையம் முற்றுகை: முன்னாள் வைத்திய அதிகாரி கைது!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

பேருவலையில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் முன்னாள் வைத்திய அதிகாரி ஒருவரை நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை நீதவான் நீதிமன்றத்திலிருந்து தேடுதல் அனுமதி பெற்ற பொலிஸார், இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

மாறு வேடத்தில் சென்ற பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கருக்கலைப்பு செய்ய தயாரான வேளையில் குறித்த மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

அத்துடன், கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்படும் பெருமளவிலான மருந்துகளும் கைப்பற்றப்பட்டன.

கருக்கலைப்புக்காக ஒருவரிடமிருந்து 45,000 ரூபாவிற்கு அதிகமாக பெற்றுவந்தமை தெரியவந்துள்ளது.

கைதின்போது அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க முயன்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button