உலகம்சுவிஸ்
Trending

பொதுப் போக்குவரத்து கட்டணத்திற்கு ‘Bibo’ புதிய செயலி!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

சுவிட்சர்லாந்தில் பொதுப் போக்குவரத்து கட்டண முறையை எளிதாக்கும் நோக்கில் புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

‘Bibo’ எனப்படும் இந்த தானியங்கி கட்டண அமைப்பு, பயணிகள் பேருந்து, ரயில் அல்லது டிராம் போன்றவற்றில் ஏறும் தருணத்தை Bluetooth தொழில்நுட்பத்தின் மூலம் தானாகவே கண்டறிந்து, பயணம் முடிவில் கட்டணத்தை கணக்கிடும் முறையில் செயல்படுகிறது.

இந்த புதிய திட்டத்தை SwissPass Alliance நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.

இந்த செயலியின் சோதனை திட்டம் ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக SwissPass Alliance நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயணங்களை சரியாக பதிவு செய்யும் திறன், கட்டண கணக்கீட்டின் துல்லியம் மற்றும் பயனர் அனுபவம் ஆகியவற்றை மதிப்பீடு செய்வதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம்.

சோதனைக் குழுவில் இருந்து பெறப்படும் கருத்துக்கள், இந்த செயலியை எதிர்காலத்தில் முழுமையாக அறிமுகப்படுத்துவதற்கான முக்கிய அடிப்படையாக இருக்கும்.

சுவிட்சர்லாந்தில் பொதுப் போக்குவரத்து ஏற்கனவே மிகச் சிறப்பாக அமைந்துள்ள நிலையில், இந்த புதிய ‘Bibo’ செயலி அறிமுகம் பயணிகளை டிக்கெட் வாங்கும் சிக்கல்களிலிருந்து விடுவித்து, மேலும் சுலபமான மற்றும் டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் எனவும் Swiss Pass Alliance நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button