இலங்கை
Trending

2 இலட்சத்து 25 ஆயிரத்து 748 மாணவர்கள் இம்முறை உயர்தரம் கற்க தகுதி!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 2 இலட்சத்து 25 ஆயிரத்து 748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

இம்முறை பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி பெற்ற பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 790 ஆகும்.

அதேபோன்று, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் சித்தியடைந்தவர்களின் வீதம் அதிகரித்துள்ளது.

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு 4 இலட்சத்து 51 ஆயிரத்து 463 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button