இலங்கை
Trending

மட்டக்களப்பில் தீ விபத்து: ஐந்து வர்த்தக நிலையங்கள் பாரியளவில் சேதம்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

மட்டக்களப்பு நகர மத்தியில் ஏற்பட்ட தீ விபத்தால் ஐந்து வர்த்தக நிலையங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளன.

இந்த தீ விபத்து இன்று (07) அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

ஒன்றுக்கொன்று அண்மையில் அமைந்திருந்த வர்த்தக நிலையங்களுக்கு வேகமாக தீ பரவியுள்ளது.

இருந்தும் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார்,
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button