உலகம்
Trending

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி: ஐவர் காயம்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

அமெரிக்காவில் இடம்பெற்ற உணவுத் திருவிழாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதோடு குழந்தை உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.

சீயட்டில் சென்டர் வளாகத்தில் உணவுத் திருவிழா நேற்று இடம்பெற்றது. இதன்போதே துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததை சியட்டில் தீயணைப்பு திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்த வேளையில், திடீரென 7 முதல் 8 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.

மேலும் சம்பவத்தில், இரண்டு வயதுக் குழந்தை, 23 வயது இளைஞன் ஒருவர், பெண்கள் மூவர் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாகசர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button