இலங்கை
Trending

செம்மணி மனிதப் புதைகுழியில் 515 எலும்புக்கூடுகள் அடையாளம்; 506 அகழ்ந்தெடுப்பு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபீத்தி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் நேற்று (08) முன்னெடுப்பட்டன.

இதுவரையிலான 101 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 515 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 506 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 47ஆவது நாளான இன்றைய தினம் 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட05 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை எழுமாறாக தோண்டப்பட்ட சோதனைக்குழிகள் இரண்டில் ஒரு குழியில் இருந்து மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button