இலங்கை
Trending

T20 உலகக் கிண்ண குழு A இறுதி போட்டியில், இந்திய அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

அகமதாபாத் (Ahmedabad) நரேந்திரமோடி மைதானத்தில் இந்திய – நெதர்லாந்து அணிகளுக்கிடையில் இந்தப் போட்டி நேற்றிரவு(18) இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்த இந்திய அணி, தொடக்க வீரர்கள் இருவரையும் பவர்ப்ளேயிலேயே இழந்தது.

Abhishek Sharma தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் வெளியேறினார்.

ஆனால், Shivam Dube 31 பந்துகளில் 66 ஓட்டங்களைப்பெற்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

அதோடு, அணித்தலைவர் Suryakumar Yadav, 34 ஓட்டங்களையும், Hardik Pandya 30 ஓட்டங்களையும்,
Tilak Varma 28 ஓட்டங்களையும் அதிக ஓட்டங்களாகப் பெற்றனர்.

இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 193 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு 194 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இந்திய அணி சார்பாக பந்துவீச்சில், Varun Chakravarthy, 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார்.

Shivam Dube 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி தான் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று 100 வீத சாதனையுடன் ‘சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button