விளையாட்டு
Trending

FIFA உலக கிண்ண தொடரில் அரையிறுதிக்கு தெரிவாகியது இங்கிலாந்து அணி!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில், நோர்வே அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

போட்டியின் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்ததால், மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

அண்ட்ரியாஸ் ஷெல்டெரூப், 36-வது நிமிடத்தில் கோல் அடித்து நோர்வேயை முன்னிலைப்படுத்தினார்.

ஜூட் பெல்லிங்ஹாம் ஆட்டத்தின் முதல் பாதியின் இறுதியில் 44 ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், கூடுதல் நேரத்தின் ஆரம்பத்தில் 92-வது நிமிடத்தில் 2ஆவது கோலையும் அடித்தார்.

ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் நோர்வே வீரர் டோர்ஜோர்ன் ஹெக்ஜெம் அடித்த கோல், ஹாலண்ட் விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டதாக VAR மூலம் மறுக்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button