இலங்கை
Trending

காலி முகத்திடலில் ஐயாயிரம் கலைஞர்கள் பரதநாட்டியமாடி கின்னஸ் சாதனை!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

கொழும்பு காலி முகத்திடலில் 5000 பரதநாட்டிய கலைஞர்கள் ஒன்றிணைந்து நிகழ்த்திய “சங்கமம் 2026” கின்னஸ் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் ‘சங்கமம் குளோபல் அக்கடமி மற்றும் இலங்கைக்கான லியா ஹோலி டேஸ்(Leah Holly Days) ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியுள்ளன.

5000 நாட்டியக் கலைஞர்கள் ஒரே மேடையில் அணிதிரண்டு ஆடிய இந்த நாட்டியாஞ்சலி, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

அதற்கான உத்தியோகபூர்வ சான்றிதழ் கின்னஸ் நிறுவனத்தால் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிடம் மேடையில் கையளிக்கப்பட்டது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button