விளையாட்டு
Trending

மேற்கிந்தியத் தீவுகளுக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை அணி!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

மேற்கிந்தியத் தீவுகளுக்கு இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது.

அதன்படி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

ஜமைக்காவின் சபீனா பார்க் மைதானத்தில் நடைபெறவிருந்த இறுதிப் போட்டி, மழையின் குறுக்கிட்டதன் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

முன்னதாக நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்ததோடு, இரண்டாவது போட்டியும் மழையால் கைவிடப்பட்டிருந்தது.

அதற்கமைய, மூன்றாவது போட்டி கைவிடப்பட்டதன்மூலம்,மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் ஒருநாள் தொடரொன்றைக் கைப்பற்றிய மூன்றாவது இலங்கை அணித் தலைவர் என்ற பெருமையை குசல் மெண்டிஸ் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் அர்ஜுன ரணதுங்க மற்றும் மாவன் அத்தபத்து ஆகிய இருவர் மட்டுமே இந்தச் சாதனையைப் புரிந்திருந்தனர்.

அதேநேரம், 23 வருடங்களின் பின்னர் இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகள் மண்ணில் தொடரொன்றை வென்றுள்ள சந்தர்ப்பம் இதுவாகவும் அமைந்துள்ளது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button