தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமையை கண்டித்து வடக்கு கிழக்கில் இன்று போராட்டம்!

யாழ்ப்பாணம் நல்லூரில் நிறுவப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டவை கண்டித்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று (28) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.


தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு புதிதாக வடிவமைக்கப்பட்ட உருவச்சிலை யாழ்.நல்லூரிலுள்ள நினைவிடத்தில் நிறுவப்பட்டிருந்தது.
இந்நிலையில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலை, யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று(27) காலையில் அகற்றப்பட்டிருந்தது.


அதனையடுத்து நினைவுச்சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை மீள நிறுவக்கோரியம் நல்லூரில் நேற்று மாலையில் போராட்டம் இடம்பெற்றது.
இந்நிலையில் திலீபனின் நினைவுச் சிலை அகற்றப்பட்டமையை கண்டித்தும் அதனை மீள நிறுவவும் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கமைய யாழ்.நல்லூரிலும் இன்று பிற்பகலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், பொதுமக்களிடம் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





