இலங்கை
Trending

யாழ் அறுகுவெளி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

யாழ்ப்பாணம் – மன்னார் ஏ35 வீதி, அறுகுவெளிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று(29) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தோடு மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பூநகரி பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் மன்னார் – வட்டக்கண்டல் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button