
தமிழ்நாடு – இராமநாதபுரம், மண்டபம், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், இலங்கைத் தமிழர் ஒருவர் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கைத் தமிழர் மறுவாழ்வு ஆணையாளர் சதீஷ் நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களை சந்தித்த அவர் அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளார்.



பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழ்நாட்டுக்குச் சென்ற சிலர், மீண்டும் இலங்கைக்கு திரும்ப விருப்பம் தெரிவித்து மனுக்களையும் வழங்கியுள்ளனர்.
ஆதார் அட்டை இல்லாததால் மாணவர்களை பாடசாலைகளில் சேர்ப்பதிலும், அரச மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதிலும் சிரமம் ஏற்படுவதாக முகாம் மக்கள் தெரிவித்துள்ளனர்.
குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, காலணி வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை பெறப்பட்டு, விசாரணை நடத்தப்படும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.





