இலங்கை
Trending

வாழைத்தோட்டம் கடற்கரையில் ஒதுங்கிய தெப்பம்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

திருகோணமலை – ஈச்சிலம்பற்று – வாழைத்தோட்டம் கடற்கரையில், மரத்தில் செய்யப்பட்ட தெப்பம் ஒன்று இன்று(14) காலை கரையொதுங்கியுள்ளது.

இந்த தெப்பமானது மியன்மார் நாட்டிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த தெப்பமானது பௌத்த மத அடையாளங்களை கொண்டுள்ளது.

இதனால் பௌத்த மத பூஜைகள் செய்யப்பட்டு கடலில் விடப்பட்ட இந்த தெப்பமானது கடலில் அடித்துச் செல்லப்பட்டு இங்கு வந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button