இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்

வங்காள விரிகுடாவில் உருவாகிய வலுக்குறைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வடக்கு மாகாணத்துக்கு அண்மையில்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

வங்காள விரிகுடாவில் உருவாகிய வலுக்குறைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது வடக்கு மாகாணத்தை அண்மித்து நிலை கொண்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக புவியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

அவர் இன்று(24) காலையில் வெளியிட்டுள்ள அறிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மிதமான (சில இடங்களில்) மற்றும் சற்று கனமான ( சில இடங்களில்) மழை எதிர்வரும் 27ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக இன்றும்(24) நாளையும்(25) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை ஈரப்பதன் நிறைந்த கீழைக்காற்றின் வருகை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள நிலவிய வரண்ட காற்றின் செல்வாக்கு குறைவடைந்து குளிர் நிலைமை சற்று சீரடைந்துள்ளது.

ஆனால் மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் குளிரான வானிலை நிலவத் தொடங்கும்.

வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் நெல் அறுவடை மற்றும் நெல் அறுவடைக்கு பின்னான செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தமது செயற்பாடுகளைத் தவிர்ப்பது சிறந்தது” – என்றுள்ளது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button