
விழிப்புணர்வுள்ள உணவு முறைமைகள் பற்றிய உலகளாவிய உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (31) பூட்டான் சென்றுள்ளார்.

பூட்டானில் நாளை (1) நடைபெறவுள்ள இதன் ஆரம்ப மாநாட்டில் கலந்துகொள்ளும் முகமாகவே பிரதமரின் அங்கு சென்றுள்ளார்.
“தருணத்திற்கேற்ப எழுச்சி பெறல்: பன்முக நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்” என்ற தலைப்பில் இதன்போது பிரதமர் முக்கிய உரையாற்றவுள்ளார்.
Follow Us





