இலங்கை
Trending

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பெண்கள் உதைபந்துப் போட்டியில், மகாஜன கல்லூரி அணிகள் சம்பியன்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்கள் உதைபந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் இரு அணிகளும் மாகாண மட்டத்தில் சாம்பியன்களாகின.

இறுதிப்போட்டிகள் நேற்று (18) யாழ் வயாவிளான் மத்திய கல்லூரி மைதானத்தி்ல் நடைபெற்றன.

20 வயது அணி இறுதிப்போட்டியில் மனிப்பாய் மகளிர் கல்லூரி அணியை எதிர்கொண்டு மகாஜனா கல்லூரி அணி 4:0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியனானது.

17 வயது அணி இறுதிப்போட்டியில் யூனியன் கல்லூரி அணியை எதிர்கொண்டு மகாஜனா கல்லூரி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியனாகியது.

17 வயது பிரிவு அணி, போட்டி ஆரம்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 5 ஆவது தடவைகளாக மாகாணமட்டத்தில் சாம்பியனாகியுள்ளது.

மேலும் அந்த அணி தேசியமட்டத்தில் தொடர்ச்சியாக 4 தடவைகள் சாம்பியனாகியுள்ளது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button