இலங்கை
Trending

வடக்கு மீனவர்களுக்கு படகுகள் வழங்கி வைப்பு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

வடக்கு மாகாணத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் கடற்றொழில் அமைச்சால் இன்று(18) வழங்கிவைக்கப்பட்டன.

யாழ்.காரைநகர் ‘சீ நோர்த்’ படகு உற்பத்தி நிறுவனத்தில் வைத்து கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் இந்த படகுகள் மற்றும் வலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

18 லட்சம் பெறுமதியான 32 வலைகளும்,
86 லட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான 18 படகுகளும் இதன்போது வழங்கப்பட்டன.

இதன்போது, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 3 படகுகளும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 13 படகுகளும், மன்னார் மாவட்டத்திற்கு 2 படகுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ‘சீ நோர்’ தலைவர் வசந்த மான்ன பெரும, சீ நோர் பணிப்பாளர் ரோஹண, யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை பணிப்பாளர் எஸ். அகிலன், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பணிப்பாளர்கள், காரைநகர் பிரதேச செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button